சுஜித் செய்தியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த பெற்றோர்.. – பாத்ரூமில் விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த துயரம்..!

1530

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன்- நிஷா தம்பதிக்கு 2 வயதில் ரேவதி சஞ்சனா என்ற குழந்தை உள்ளது.

மீனவரான லிங்கேஷ்வரன் தனது மனைவியுடன் நேற்று மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்பது தொடர்பான செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தனது குழந்தை காணாமல் போகவே அக்கம் பக்கத்தில் தேடினர். மேலும், தனது வீட்டின் கழிவறையை திறந்து பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் கேனுக்குள் குழந்தை ரேவதி சஞ்சனா தலைக்குப்புற கவிழ்ந்து மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Advertisement