“ஸ்டாராகும்” தூத்துக்குடி தொகுதி.., தமிழிசையை எதிர்த்து களமிறங்கும் கனிமொழி

869

2019 ஆம் ஆண்டு நடக்க இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி உள்ளது. தற்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.அதிமுக உடன் கூட்டணியில் பாஜக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தேச பட்டியலில் வடசென்னை, சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கேவை அகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

அதில் தூத்துக்குடி தொகுதியில் மாநில பாஜக தலைவி தமிழிசை சவுந்தர ராஜன் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரை எதிர்த்து திமுக மகளிர் அணி தலைவி கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனால் இத்தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளது.