சட்டம் – ஒழுங்கை பேணிக்காக்க உறுதியான நடவடிக்கை எடுப்பேன் – தூத்துக்குடி எஸ்.பி.

301

தந்தை – மகன் உயிரிழப்பையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்ததையடுத்து, எஸ்.பி. அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டார்.

புதிய எஸ்.பி.யாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, இன்று காலையில் தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் ஜெயக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய எஸ்.பிக்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஜெயக்குமார் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கை பேணி பாதுகாக்கவும், போக்குவரத்து பிரச்சனையை சீரமைக்கவும் பாடுபடுவேன் என்று தெரிவித்தார்.

Advertisement