சின்னத்திரை நடிகை நிலானியை திருமணம் செய்ய வற்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார்.

2338

சின்னத்திரை நடிகை நிலானியை திருமணம் செய்ய வற்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார்.

சின்னத்திரை நடிகை நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, காவலர் சீருடையில் போலீசாரை விமர்சித்து வீடியோ வெளியிட்டதால் கைதானார். அதன்பின் அவர் ஜாமினில் வெளிவந்தார்.

அவர் காந்தி லலித்குமார் என்ற இளைஞருடன் கடந்த 3 ஆண்டுகளாக பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லலித்குமார் நடிகை நிலானியை வற்புறுத்தியதாகவும், இதற்கு நிலானி மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் காந்தி லலித்குமார் தகராறு செய்ததாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நடிகை நிலானி புகார் அளித்தார். இதனால், மனமுடைந்த காந்தி லலித்குமார் நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காந்தி லலித்குமார் உயிரிழந்தார்.

Advertisement