மரத்தில் கார் மோதி விபத்து! பிரபல சீரியல் நடிகைகள் இருவர் பலி!

1869

தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர்கள் பார்கவி (20), அனுஷா (21). இவர்கள் நடிக்கும் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு, தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள அனந்தகிரி காட்டுப்பகுதியில் நடந்தது.

இதற்காக இவர்கள் இருவரும் கடந்த திங்கட்கிழமை சென்றனர். ஷூட்டிங் முடிந்து நேற்று காலை ஐதராபாத்துக்கு காரில் திரும்பிக்கொண் டிருந்தனர். காரில் பார்கவி, அனுஷாவுடன் வினய் குமார் என்பவரும் இருந்துள்ளார்.

கரை சாக்ரி ஓட்டினார். கார், அப்பாரெட்டி குடா என்ற என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் இருந்து ஒரு லாரி வேகமாக வந்தது. அதில் மோதுவதை தடுக்க, டிரைவர் காரை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பார்கவி சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த அனுஷா, சக்ரி, வினய் ஆகியோர், ஐதராபாத் உஸ்மானியா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அனுஷா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of