இரட்டை கோபுரம்: 17 வது ஆண்டு நினைவு தினம்

949

அமெரிக்கா: இரட்டை கோபுரம், அல்கொய்தா தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டு 17 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

உருக்குலைந்த உடல்கள்

விமானத்தை கடத்தி இரட்டை கோபுரத்தை தீவிரவாதிகள் தாக்கியதில் 1,100 பயணிகள் பலியானர். இந்த சம்பவத்தில் உடல்கள் எரிந்து, சிதைந்து யாருடைய உடல் எது என்பதை அறிய முடியாத அளவிற்கு உருக்குலைந்து போனது.

இன்னும் கூட நியூயார்க் ஆய்வகத்தில் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டிஎன்ஏ சோதனை

கொல்லப்பட்டவர்களின் எலும்புகளை எடுத்து டிஎன்ஏ சோதனை நடத்திய போதிலும் பயனில்லை. இந்த தாக்குதலில் மொத்தம் 2,753 பேர் பலியாகினர். அதில் 1,642 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவில் நான்கு விமானங்களை கடத்திய தீவிரவாதிகள், இரண்டு விமானங்களை இரட்டை கோபுரத்தின் மீது மோத செய்து மொத்த கட்டிடத்தையும் தரைமட்டம் அடையச்செய்தனர்.

இதில் இரண்டு விமானங்களிலும் இருந்த 147 பயணிகளும் வணிக மையக் கட்டிடத்தில் இருந்த 2,606 பேரும் பலியாகினர்.மற்றொரு விமானத்தை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் மீது மோத செய்ததில் விமானத்திலிருந்த 59 பேரும் பென்டகனில் இருந்த 125 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

கடத்தப்பட்ட நான்காவது விமானத்தில் பயணித்த, பயணிகள் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டைதில் தீவிரவாதிகளால் நினைத்த இலக்கை தாக்க முடியாமல் விமானம் விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 40 பேர் பலியாகினர்.

கொல்லப்பட்ட ஒசாமா விடிவு பெற்ற அமெரிக்கா

தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடனின் அல்குவைதா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

ஒன்பது ஆண்டுகள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின், 2011ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதன் பிறகு அமெரிக்காவில் எந்த ஒரு தீவிரவாத தாக்குதலும் நடைபெறவில்லை.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of