இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட டிவிட்டர் நிறுவனம்

2603

டிவிட்டர் நிறுவனம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான லடாக்கினை, சீனாவின் பகுதியாக சித்தரித்து தவறான வரைபடம் வெளியிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, இதுகுறித்து டிவிட்டர் நிறுவனம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், லடாக்கை சீனாவின் ஒரு பகுதி போல் தவறாக குறிப்பிட்டதற்காக டிவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளதாக, தரவு பாதுகாப்பு மசோதாவுக்கான நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டர் நிறுவனம் தங்களிடம் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில், தவறு ஏற்பட்டதை ஒப்புக்கொண்டு இருப்பதாகவும், வரும் 30ஆம் தேதிக்குள் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Advertisement