அமித்ஷாவின் இந்தி குறித்து சர்ச்சை பேச்சு: டுவிட்டரில் டிரெண்டாகும் இந்தி எதிர்ப்பு..!

912

இந்தி தினத்தை முன்னிட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஒரே மொழி ஹிந்தி மொழி தான் என கூறிய நிலையில் ஹிந்தி எதிர்ப்பிற்கான ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இந்தி தினத்தை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நாட்டை அடையாளப்படுத்தும் மொழி இந்தி தான் எனவும், நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியை போலவே இந்தியையும் பயில வேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இது குறித்த பல அரசியல் தலைவர்கள், பாஜக இந்தியை திணிக்க நினைக்கிறது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தி திணிப்பிற்கு எதிராக #StopHindiImposition #StopHindiImperialism #தமிழ்வாழ்க ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றன. உலக அளவில் இந்த  #StopHindiImposition ஹேஷ்டாக்குகள் இரண்டாவது இடத்திலும் இந்திய அளவில் முதலிடத்திலும் உள்ளது.

இந்த ஹேஷ்டேக்குகள், இன்றைய இந்தி தின ஹேஷ்டேக்கான #HindiDiwas ஆகிய ஹேஷ்டேக்கை பின்னுக்கு தள்ளி டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement