“அரசியல் தலைவர்களே..,” அதிர்ச்சி கொடுத்த டுவிட்டர்..! தலைமை நிர்வாகி போட்ட அதிரடி டுவீட்..!

494

தேர்தல் வரும் நாட்களில் அரசியல் வாதிகள், மைக்கை பிடித்து மாங்கு மாங்கென்று பேசி, மக்களின் மனதைக் கவர்ந்து வாக்கு சேகரித்தது அந்த காலம்.

ஆனால், இந்த காலத்தில், இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே, சோசியல் மீடியாக்களில் விளம்பரங்களை பல கோடி ரூபாய் செலவில் தட்டி விடுகின்றனர்.

இது நேரடியாக செய்யும் பிரச்சாரத்தை விடவும் மிகவும் பவர் புல்லாக இருக்கிறது. இதனால் இந்த முறையையே, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர்.

இருந்தும், ஆங்காங்கே, நேரடி பிரச்சாரம் நடைபெறுகிறது, அது வேறு கதை. இவ்வாறு இருக்க டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேக் டோர்சே, டுவீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில், டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பானது அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Advertisement