பேனரால் உருவான கலவரம் – திருவண்ணாமலையில் என்ன நிலவரம்?

768

திருவண்ணாமலை அடுத்த சின்ன காங்கேயனூர் கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு சமுதாயத்தினர், திருமண விழாவுக்காக ஆங்காங்கே பேனர்கள் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த பேனர்களை மற்றொரு சமூகத்தினர் நள்ளிரவில் கிழித்ததாக தெரிகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தெரு விளக்குகள் உடைக்கப்பட்டன.

இதனை கண்டித்து, 100க்கும் மேற்பட்டோர், திருவண்ணாமலை- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of