சுடுதண்ணீர் கொட்டி உயிரிழந்த இரண்டு குழந்தைகள்

104

திருவள்ளூர் அருகே குளிப்பதற்காக வைத்திருந்த சுடுதண்ணீர் கொட்டியதில் உடல் வெந்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவர் அங்கன்வாடி ஊழியரான இவருக்கு ஸ்ரீதர் சித் என்ற நான்கரை வயது மகனும், ஜோதி சித் என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் இருந்தனர்.

கடந்த பத்தாம் தேதி அனிதா குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் மூலம் டேபிள் ஒன்றின் மீது பாத்திரத்தை வைத்து தண்ணீரை கொதிக்க வைத்துள்ளார். அப்போது சூடு அதிகரித்ததால் பாத்திரம் நழுவி கீழே விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் மீதும் சுடுதண்ணீர் சிதறி விழுந்தது.

இதனால் குழந்தைகளின் உடல் வெந்து ஆபத்தான நிலையில் குழந்தை இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர் இந்த விபத்து தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of