இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல், மாணவனை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம்

257
avadi

ஆவடி அருகே இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மாற்று கல்லூரி மாணவனை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் பேருந்துகள், ரயில்கள் மற்றும் பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. மோதலில் ஈடுபடும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. இந்நிலையில் மாநில கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் ஆவடி கோவர்த்தனகிரியைச் சேர்ந்த முகேஷ் என்ற மாணவர் கல்லூரி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

ஆவடி பேருந்து நிலையம் வந்த முகேஷை, அங்கிருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் விரட்டியுள்ளனர். ஓ.சி.எப். திடலுக்குள் ஓடிய முகேஷை அவர்கள் துரத்திச் சென்று வெட்டியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் முகேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை தேடி வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவர் முகேஷ் ஏற்கெனவே சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here