பாதாள சாக்கடையில் விஷவாயு தாக்கி இருவர் பலி..!

364

கோவை, திருநகர் பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யவதற்காக மூன்று நபர்கள் சென்றுள்ளனர்.

கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்டிருந்த அடைப்பைச் சரி செய்வதற்காக சாலையில் உள்ள பாதாள சாக்கடையைத் திறந்த போது முருகன் என்பவர் விஷவாயு தாக்கி சாக்கடைக்குள் விழுந்துள்ளார்.

முருகனை காப்பாற்ற முயன்ற பாண்டிதுரை என்பவரும் விஷவாயு தாக்கி பாதாள சாக்கடையில் விழுந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of