இரு பிரிவினர் மோதல்… பொலீரோ ஜீப்புக்கு தீவைப்பு

240

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு பிரிவினரிடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

ஒரு பிரிவைச் சேர்ந்த பாண்டியன் என்பவர்  தான் பொலீரோ ஜீப்பில் வேதாரண்யம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே சென்று கொண்டிருந்தார்.அப்போது  நடந்து சென்று கொண்டிருந்த ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் மீது ஜீப் உரசியதாக கூறப்படுகிறது.

இதனால் இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட தகராறில் ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த கும்பல் பொலீரோ ஜீப்புக்கு தீ வைத்தனர். இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

கலவரத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர நாகையில் இருந்து ஏராளமான போலீசார் வேதாரண்யம் விரைந்தனர்.இரு பிரிவினர் மோதலால்  பதற்றமான சூழல் நிலவுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of