இரட்டை தலை சுறாக்கள் ! புது இனமா ? பரிணாம வளர்ச்சியா ?

1791

மனித இனம் உணவுச்சங்கிலியில் உயர்ந்து நின்றாலும், நம்முடன் இணைந்து வாழும் இந்த இயற்கைக்கும், அந்த இயற்கை கொண்ட பல உயிரினங்களுக்கும் அஞ்சியே, மனித இனம் வாழ்ந்து வருகின்றது. குரங்கில் இருந்து பிறந்தான் மனிதன் ! இதுவே பரிணாம வளர்ச்சி என்கிறோம்.

human-to-monkey

பரிணாமவளர்ச்சி குறித்து டார்வின் தொடங்கி ஆயிரம், ஆயிரம் அறிஞர்கள் விளக்கம் கொடுத்தாலும், இந்த இயறக்கை அன்னை நம்மை அவ்வப்போது வியப்பில் ஆழ்த்த, சற்றும் மறப்பதில்லை. யானைகளின் மூதாதையராக கருதப்படும் உள்ளி மாமோத்கல் தொடங்கி, இன்று பூமியில் வாழும் பல கோடி உயிரினங்கள் அனைத்தும் பரிணாம வளர்ச்சி அடைந்தவையே.

mamomth

விஷம் உண்டாலும் சாகாத எலிகள், கண்கள் இன்றியும் நீண்ட காலம் வாழும் மீன்கள், அடிக்கடி நிறத்தை மாற்றும் ஆந்தைகள் என்று நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சின் உச்சத்தை சில உயிரினங்கள் தொடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த வகையில் தற்போது சுறா மீன்களை பற்றிய ஒரு புதிய ஆய்வு நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள், இரட்டை தலை கொண்ட சுறா மீன்கள் இருப்பதை தற்போது உறுதி செய்துள்ளனர். இவை எவ்விதத்திலும் மனிதனால் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

shark

சுமார் 500 வகை சுறா மீன்களில் வெறும் 40 வகை சுறாக்கள் மட்டுமே முட்டையிடும் வகையை சார்ந்தவை. பிற இன சுறாக்கள் அனைத்தும் குட்டிகளை மட்டுமே ஈனும், அவ்வகை, முட்டையிடும் சுறாக்களில் தான் இந்த அதிசய இரட்டை தலை கொண்ட சுறாக்கள் பிறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கத்திய மத்திய தரைக்கடல் பகுதியில் “Atlantic saw tail cat shark” என்ற வகையை சார்ந்த இரட்டை தலை சுறா கண்டறியப்பட்டது. மேலும் அடுத்த சில மாதத்திலேயே புளோரிடா கடற்கரை ஓரத்தில் இரட்டை தலை கொண்ட bull சுறா இனம் ஒன்று கண்டறியப்பட்டது.

இந்த வகை சுறாக்களுக்கு இரண்டு தலை, இரண்டு கல்லீரல் மேலும் இரண்டு வயிற்று பகுதி இருந்தாலும், ஒரே குடல்பாதையை கொண்டவையாக திகழ்கின்றன. அதாவது ஒரு தலை உண்பதால் இரண்டும் வளரும். முழுமையாக வளர்ந்த எந்த ஒரு இரு தலை சுறாக்களும் இதுவரை கண்டறியப்படவில்லை.

bull-shark

இவ்வகை சுறாக்களை ஆய்வு செய்த ஆராச்சியாளர்கள் இவை கடலுக்கடியில் சுமார் 2000 அடி ஆழத்தில் வசிப்பவை என்றும், இதுவரை இவ்வகை சுறாக்கள், தோன்றியதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பல வகை உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி அடைவது போல தற்போது இந்த சுறாக்களும் மாற்றம் பெருகின்றதா ? இனி சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரட்டை தலை சுறாக்களின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்குமா ? இவற்றால் மனிதனுக்கு எவ்வகை பாதிப்புகள் ஏற்படும் ? இவை அனைத்திற்கும் அதிவிரைவில் அறிவியல் விடை சொல்லும் என்று எதிர்பார்ப்போம்.

– லியோ (இணையதள அணி)

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of