அதிமுக-வுக்கே இரட்டை இலை சின்னம்.., டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

417

தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஒருங்கிணைந்த அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. இதனை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இரட்டை இலை சின்னம் அதிமுகவுகக்கே என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of