வெடிப்பொருட்களுடன் இருவர் கைது – கண்காணிப்பாளர் முருகன்

132
gelatin-sticks10.3.19

ஜார்கன்ட் பகாரோ மாவட்டத்தின் அருகில் ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய 25 பெட்டிகள் மற்றும் 5000 மின்னணு வெடித்தூண்டிகளுடன் இருவர் பிடிப்பட்டுள்ளனர்.

இதைப்பற்றி பகாரோ காவல் கண்காணிப்பாளர் முருகன் அவர்கள் கூறுகையில், நவாடித் என்ற பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய வாகனம் ஒன்றை மறித்து சோதனை செய்துள்ளனர்.

அதில் ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய 25 பெட்டிகளும் 5000 மின்னணு வெடித்தூண்டிகளும் (Electronic Detonators) இருந்தது தெரியவந்தது.

அந்த வாகனத்தில் இருந்த இருவர் தற்போது கைது செய்யப்பட்டு மேற்கட்ட விசாரணைகள் நடந்துவருவதாகவும் திரு. முருகன் தெரிவித்தார்.