ஒரே எண்ணில் இரண்டு பேன்கார்ட்? அதிர்ச்சியில் வங்கி

58

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அலுவலர்.இவரது மகன் செந்தில்குமார் (வயது 45). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.

வங்கியில் தனிநபர் கடன் கேட்டு ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தார். அதனை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது, அவரது பான் கார்டு எண்ணில் வந்த சான்றானது அதே பெயரில் வேறு ஒரு முகவரியை காண்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரி, பான் கார்டு எண்ணானது வேறு ஒரு முகவரியில் இருப்பதாக காட்டுகிறது என்று தெரிவித்தார்.

கீழவாளாடியை சேர்ந்த மற்றொரு செந்தில்குமாரை நேரில் சந்தித்து விசாரித்தபோது, இருவரது பான் கார்டு எண்கள் மற்றும் தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவை ஒரே மாதிரி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர்.