அரசு மதுபானக்கடையில் சுவர் துளையிட்டு மதுபானங்கள் திருட்டு …!

411

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருதினங்களுக்கு முன்பு  சுவரில் துளையிட்டு மது பானங்கள் திருடப்பட்டிருந்தன.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தபோது ஒரு கும்பல் அப்பகுதியில் மது பானங்கள் விற்றது தெரிய வந்ததையொட்டி  தீவிரமாக தேடியதன் விளைவாக  அப்பகுதியை சேர்ந்த சங்கர், தங்கதுரை, மணிவண்ணன் மற்றும் 16 வயது சிறுவனும் 18 வயது  இளைஞர் ஒருவரும்   போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருட்டு சம்பவத்தை ஒப்பு கொண்டதோடு மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் கடை சுவரில் துளையிட்டு விலை உயர்ந்த மதுபானங்களை திருடியதாகவும் அவற்றை விற்றதோடு அதிகளவில் மது அருந்தியதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்விருவரும் நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of