தலைவிரித்தாடும் சாதியக்கொடுமை! மலம் உண்ண வைத்த இருவர் கைது!

1025

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருவாண்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லிமலை. இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராவார்.

இவருக்கும் ஆதிக்கம் உள்ள சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல், ராஜேஷ் மற்றும் ராஜ்குமாருக்கும் இடையே கோயில் திருவிழாவின் போது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறால் மோதல் நீடித்த நிலையில் கடந்த மாதம் 28-ஆம் தேதி கொல்லிமலையை அவர்கள் மூவரும் சேர்ந்து கட்டையால் தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி மலம் உண்ண வைத்தும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோட்டூர் காவல் நிலையத்தினர் தாக்குதல் நடத்திய இருவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.