தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள்பறிமுதல்

619

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத், பாலுசெட்டிசத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் தென்னேரி செல்லும் சாலையில், வாலாஜாபாத் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முயன்றனர்.

ஆனால் அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றதால், அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் திருச்சியைச் சேர்ந்த சிங்கார வேலன், வேலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலிசார், அவர்களிடமிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement