கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது!

101

மதுரை பாண்டி கோயில் பகுதியில் பேருந்து மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த பாலகிருஷ்ணன் மற்றும் லாவண்யா என்பவர்களை விசாரணை செய்ய முயன்ற போது அவர்கள் தப்பிக்க முயன்றனர்.

பின்னர் அவர்களை மடக்கி பிடித்த போலீசார், அவர்களிடமிருந்த 21 கிலோ கஞ்சா மற்றும் 20ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

அதனை தொடர்ந்து பணம் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறை இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.