ஜம்மு-காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

819

ஜம்மு-காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

குப்வாரா மாவட்டத்தின் ஹந்வாராவுக்கு அருகே உள்ள குளூரா பகுதியில், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாதுகாப்பு படையினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.

Advertisement