இருசக்கர வாகனத்துக்கு பாடை கட்டும் நூதன போராட்டம்

1184

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைபாஸ் பகுதியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் விலை உயர்வால் இருசக்கர வாகனம் தற்கொலை செய்து கொண்டது போல் காட்சி அமைத்து பாடையில் ஏற்றி நூதன முறையில் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement