பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் இரண்டு பெண்கள்

1081

புதுக்கோட்டை அருகே பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் இரண்டு பெண்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அறந்தாங்கி அடுத்த அக்னி பஜாரை சேர்ந்த சாகுல் அமீது என்பவரின் மனைவி நூர்ஜகான். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நூர்ஜகான், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பன்றிக்காய்ச்சல் உள்ளது என்று உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் நூர்ஜகானின் உறவினரான பொர்ணசி என்ற பெண்ணுக்கும் பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து காய்ச்சல் பாதிக்கப்பட்ட இருவரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெறுமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியதை தொடர்ந்து இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தற்போது அவர்களுக்கு புதுக்கோட்டை அரசு  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Advertisement