பெற்றோர்களின் அலட்சியம்…! பறிபோன 2 வயது குழந்தையின் உயிர்..!

282

மீன்தொட்டிக்குள் 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது கரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமூர்த்தி – சுகந்தி தம்பதியினருக்கு ஹரிதேஷ் என்ற 2 வயது குழந்தை உள்ளது. சுகந்தி அவரது தந்தையின் வீட்டிற்கு மகன் ஹரிதேஷுடன் சென்றுள்ளார். அங்கு சுகந்தி தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது சுட்டித் தனமாக விளையாடிக்கொண்டிருந்த ஹரிதேஷ் எதிர் வீட்டு இளங்கோவன் வீட்டிற்கு சென்றுள்ளான்.

அங்கு 2 அடி உயரத்தில் மீன்தொட்டி இருந்துள்ளது. அழகாக துள்ளி நீந்திக்கொண்டிருந்த மின்களைப் பார்த்து ஹரிதேஷ் தண்ணீரில் கைவிட்டு விளையாடிக்கொண்டிருந்தான். அப்பொழுது எதிர்பாராதவிதமாக அவனது கால் வழுக்கி மீன்தொட்டிக்குள் விழுந்து மூச்சுத்திணறி இறந்துள்ளான்.

இந்நிலையில் தூங்கி எழுந்த சுகந்தி அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தேடியுள்ளார். ஆனால், எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மின்தொட்டிக்குள் குழந்தை இறந்து மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எதிர்வீட்டினர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இருந்தாலும் குழந்தையை காப்பாற்றி விடலாம் என எண்ணி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் அலட்சியமாக இல்லாதிருந்தால் ஒரு குழந்தையின் உயிர் பறிபோகாமல் இருந்திருக்கும்.