“5 ஆண்டு சிறை.. ரூ.76 லட்சம் அபராதம்..” சவுதி அரசு அதிரடி

641

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், ஐக்கிய அரபு அமீரகத்திலும் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

கொரோனா வைரசால் அங்கு இதுவரை  8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 814 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவை தடுப்பதற்கு சவுதி அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸை வேண்டுமென்றே பரப்பும் நோக்கத்துடன் வைரஸ் அறிகுறிகளுடன் வெளியில் சுற்றித்திரிபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும், இந்திய மதிப்பில் 76 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் குறித்து தெரிந்தும், அரசிடம் தகவல் தெரிவிக்காமல் இருப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறையும் சுமார் 8 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of