Bye Bye சொன்ன Uber Eats..!

401

இந்தியாவில் Uber Eats, Zomato, Swiggy ஆகிய நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முன்னணியில் இருந்து வருகிறது.

இந்நிலையில், Uber Eats தனது ஆன்லைன் உணவு விற்பனை பிரிவை சக போட்டியாளர் Zomato-க்கு விற்பனை செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்நிறுவத்தின் டெலிவரி கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் Zomato-வுக்கு மாற்றப்படப்போவதாகவும், இது இன்று முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களிடையே உள்ள கடும் போட்டியை சந்திக்க முடியாமலே Uber Eats-ஐ விற்பனை செய்வதாக அதன் CEO, தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் மட்டுமே Uber Eats கைமாறப்படுவதாகவும், மற்ற நாடுகளில் உள்ள கிளைகள் விற்பனை செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது பற்றி கூறிய அவர், டாக்சி சேவைகளில் கூடுதல் முதலீடு மற்றும் கவனம் செலுத்தப்போவதாக கூறினார்.

தற்போது Zomato-விற்கு Swiggy மட்டுமே போட்டியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of