நான் ரெடி.., நீங்க ரெடியா? உதயநிதி அதிரடி

533

அன்புமணியுடன் விவாதிக்க தாம் தயார் அவர் தயாரா என் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் மக்களவை தேர்தலில் முதல்முறையாக திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி களமிறங்கியுள்ளார்.

முதல்வர், துணை முதல்வர், மோடி என அனனவரையும் காரசாரமாக அவர் தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சனம் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக அன்புமணியை கண்டமேனிக்கு விமர்சித்து வருகிறார். இதனால் கடுப்பான அன்புமணி உதயநிதி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார் என கூறினார்.

அவருக்கு தைரியம் இருந்தால் தமிழக திட்டங்கள் குறித்து என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என கேட்டிருந்தார். இந்நிலையில் விருதுநகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி பேசுகையில், முதல்வரை டயர் நக்கி என்றெல்லாம் கூறிய அவர் தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளார்.

நான் உண்மையை தானே பேசினேன். ஏன் அன்புமணிக்கு கோபம் வருகிறது. அன்புமணியிடம் விவாதம் செய்ய நான் தயார், அவர் தயாரா என உதயநிதி பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.