வெயிலை விட கொடுமையானது மோடி ஆட்சி – கடும் வெயிலில் உதயநிதி ”பஞ்ச்”

307

திருத்தணியில் ஜெகத்ரட்சகனை ஆதரித்து பிரச்சாரம் செய்த உதயநிதி, வெயிலைவிட கொடுமையானது மோடி ஆட்சி என பேசினார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளராக ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் நேற்று திருத்தணியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “நான் பிரச்சாரத்துக்கு சென்ற பகுதிகளில் எல்லாம், பிரதமர் மோடியை மக்கள் திட்டி வருகிறார்கள். வெயிலைவிட கொடுமையானது மோடி ஆட்சி.

மோடி பிரதமரான பின்னர் வெளிநாடுகளில் ஐந்து வருடங்களாக சுற்றி திரிந்தார். நாட்டின் மக்களவைக்கு மொத்தமே 19 நாட்கள் தான் பிரதமர் மோடி வந்துள்ளார்.கஜா புயல், ஒகி புயல் வந்தபோது பிரதமர் மோடி தமிழகத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை. அவர் நாடு நாடாக சுற்றிய செலவு மட்டும் ரூ.5000 கோடி.

இந்த தேர்தலில் வில்லன் என்றால் அது மோடி தான். தமிழக முதல்வர்கள் தான் இவரது அடியாட்கள் .இவர்களை விரட்ட ஏப்ரல் 18ம் தேதி மறக்காமல் உதயசூரியன் சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார்.