பரபரப்பு வீடியோ : மாணவன் தற்கொலை..! அஞ்சலி செலுத்த வந்த உதயநிதி..! கடும் எதிர்ப்பு..!

687

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் வரும் ஞாயிற்று கிழமை நீட் தேர்வை எழுந்தவிருந்தார்.

இதனிடையே நீட் தேர்வால் மன உளைச்சல் ஏற்பட்டு, கிணற்றில் குதித்து விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் மாணவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், பலரும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இவ்வாறு இருக்க, மாணவன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்றிருந்தார். அப்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் கோஷமிட்டனர்.

இதனால் திமுக – பாமக தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விடமாட்டோம் என்று கோஷமிட்டபடி, உடலை வேறு வழியாக தூக்கிச் சென்று ஊர்வல வண்டியில் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of