ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுக மக்களுக்காக உழைக்கும் கட்சி – உதயநிதி ஸ்டாலின்

536

மக்களவை தேர்தலில், நாளை நமதே நாற்பதும் நமதே என்று திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், வரவிருக்கின்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெரும் அணியாக திமுக உள்ளது என்று கூறினார்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு உழைக்கின்ற ஒரே இயக்கம் திமுக தான் என்று கூறிய அவர், வெகு விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட போகிறது என்றும் இதற்காக தமிழக மக்கள் காத்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of