குடியுரிமை திருத்தச் சட்டம்: நடிகர் ரஜினி போட்ட டுவீட்.. – கலாய்த்து பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

902

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் படி பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்க முடியும், இதனால், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, அசாம், டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டத்தின் போது காவல்துறையால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் உத்தரப்பிரதேசத்தில் 2 பேரும், மங்களூரில் ஒருவரும்,லக்னோவில் ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது குறித்து தர்பார் டிரைலர் வெளியீட்டில் எழுப்பிய கேள்விக்கு ‘அது குறித்து பேசுவதற்கான இடம் இதுவல்ல’ என கூறி நடிகர் ரஜினிகாந்த் நழுவினார்.

தொடர்ந்து மவுனம் காத்து வந்த ரஜினிகாந்த் நேற்றைய தினம், ‘எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது.

தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது’என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இவரது பதிவிற்கு குறித்து பேசிய சீமான், பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வாகாது தான், வன்முறை செய்தது யார்? குடியுரிமைச் சட்டத் திருத்தம் பற்றிய உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா அதை சொல்லுங்கள் முதலில் என கேள்வி எழுப்பினார்.

மேலும், அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதை விட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது எனகூறினார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பதிவில்,தலைவர் ஸ்டாலின் தலைமையில் 23ம் தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம்.

உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு ‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டு வரவும் என ரஜினியை கலாய்க்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of