“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..!

723

பாஜகவின் மத்திய அரசு தற்போது வேளான்மை தொடர்பான மசோதாக்களை கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாக்களுக்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சிலர் ஆதரவும் அளித்து வருகின்றனர். இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் வேளான் மசோதாக்கள் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், வேளாண் மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு தந்த அதிமுக, மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளது.

பணம், பதவிக்காக பாஜகவுக்கு அடிமையாகவும் இருக்கணும், தேர்தல் வர்றதால திடீர்னு முதுகெலும்பு முளைச்ச மாதிரியும் நடிக்கணும். டெலிகேட் பொசிஷன். என்று கூறியுள்ளார்.