கமல் எடுத்த முடிவை உதயநிதியும் எடுப்பாரா..?

1119

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த நிலையில், இயக்குநர் ராஜேஷின் மூலம் ஓகேஒகே என்ற படம் மூலம் அறிமுகமானார்.

நமக்கு என்ன கதாபாத்திரம் வரும் என்பதை சரியாக கனித்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த மாதிரியான படங்களில் அவர் நடித்து வந்தார். இதனிடையே அரசியலில் ஆர்வம் வந்து, கடந்த லோக் சபா தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் தற்போது உதயநிதிக்கு இளைஞரனி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கியதில் இருந்து, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்தியன் 2-ல் நடிக்க இருக்கிறார் என்பதெல்லாம் வேறு கதை.

திரைப்படத்தில் நடிப்பதற்கு முழுக்கு போட்ட கமல் திரைப்படங்களை தயாரித்து மட்டும் வருகிறார். கமலைப்போன்று உதயநிதி ஸ்டாலினும் அரசியலில் தீவிரமாக செயல்படுவதற்கு, திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போடுவாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of