
நாகை மாவட்டம் திருக்குவளையில், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில், திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில், நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு, பொதுமக்களிடையே உரையாற்றினார்.
அப்போது, பெருந்தொற்று காலத்திலும் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம், தி.மு.க மக்களுக்கு உறுதுணையாக இருந்ததாக குறிப்பிட்டார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று, ஸ்டாலின் முதலமைச்சராவது உறுதி என்றும் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அனுமதியின்றி பிரச்சாரம் நடத்தியதாக கூறி, அவரை கைது செய்து, பின்னர் விடுவிக்கப்பட்டார்.