வியர்வையை துடைத்த வேட்பாளர்! சர்ச்சையில் சிக்கிய உதயநிதி!

624

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று பொன்முடி மகன் கவுதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம் செய்தார். பொன்முடி மகன் கவுதம் சிகாமணி தற்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து உதயநிதி ஆத்தூரில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்தவெளி வேனில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் வியர்வை ஏற்பட்டது.

இதைப்பார்த்த கவுதம் சிகாமணி அவருக்கு வியர்வையை துடைத்துவிட்டார். உதயநிதியின் முகத்தை தன்னுடைய துண்டை வைத்து கவுதம் துடைத்துவிட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இவை பெரிய வைரலாகி உள்ளது. இதனால் உதயநிதிக்கு எதிராக பலர் பேச தொடங்கி இருக்கிறார்கள்.

உதயநிதி, கவுதமை இப்படி செய்ய விட்டு இருக்க கூடாது, வியர்வையை கூட துடைத்துக் கொள்ள முடியாதா? என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of