“எங்க தமிழே வரலையே..,” முதல்வர் சொன்ன அந்த வார்த்தை..! உதயநிதி ஸ்டாலின் போட்ட டுவீட்..!

516

திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், நடிகருமானவர் உதயநிதி ஸ்டாலின். இவர் முதலில் தயாரிப்பாளராக இருந்து, பின்னர் நடிகராக அவதாரம் எடுத்தார். ஸ்டாலினைத்தொடர்ந்து இவரும் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் போக்குவரத்து போலீசார் வழங்கிய ஒப்புகை சீட்டின் படத்தை பகிர்ந்து டுவீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில், மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட தமிழக அமைப்பு நாளான நேற்று, போக்குவரத்து போலீசார் வழங்கிய ஒப்புகை சீட்டில், தமிழை காணவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ஹிந்தியே தேசிய மொழி’ என, அமித் ஷா பேசிய போது, ‘நாங்கள் இருமொழி கொள்கையை கடைபிடிக்கிறோம்’ என, முதல்வர் கூறினார் என தெரிவித்த அவர், அது, ஆங்கிலமும், ஹிந்தியும் தான் என, சொல்லாமல் விட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதியின் இந்த டுவீட் குறித்து நெட்டிசன்கள் பல தரப்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of