விக்ரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி..? பரபரப்பில் அரசியல் வட்டாரம்..!

447

தலைமை தேர்தல் அதிகாரி தமிழகத்தில், நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி ஆகிய தொகுதிகளில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பையடுத்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து, நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும், விக்ரவாண்டி தொகுதியில் திமுகவும் போட்டியிடும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி எம்பி கௌதம சிகாமணி அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு அளித்துள்ளார்.

எனவே, உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக நிறுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாளை மாலைக்குள் இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of