நெட் தேர்வு எப்போது ? – தேர்வு தேதி அறிவிப்பு | UGC NET

120

உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிட தகுதிக்காக நடத்தப்படும் நெட் தேர்வு தேதியை மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

பொதுமுடக்கத்தால் ஜூன் மாதம் நடக்க இருந்த நெட் தேர்வு, செப்டம்பர் 16 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 16 முதல் 23 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வுகள் நடைபெற உள்ளதால், நெட் தேர்வு தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு தேர்வுகளுக்கும் முன்பதிவு செய்திருக்கும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிட தகுதிக்காக நடத்தப்படும் நெட் தேர்வு, செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நெட் தேர்வுக்கான விரிவான அட்டவணை, ஹால் டிக்கெட் உள்ளிட்ட விவரங்கள், ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement