மொத்தம் 10 ஆண் மகன்கள்..! மூத்தவனுக்கு வயது 17 கடைசி மகனுக்கு வயது 2.. தம்பதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!

1224

இங்கிலாந்தில் வரிசையாக 10 ஆண் குழந்தைகளைப் பெற்ற தாய் இறுதியாக பெண் குழந்தையைப் பெற்ற சம்பவம் அந்த தம்பதியினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் மற்றும் அலெக்சிஸ் தம்பதியினருக்கு இதுவரை 10 ஆண் குழந்தைகள் உள்ளன. தற்போது அலெக்சிஸ் 11வது முறையாக தாயாகி உள்ளார் . இந்த பிரசவத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு கேமரூன் என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் குழந்தை குறித்து பத்திரிகையாளரிடம் பேசிய அலெக்ஸிஸ் இந்த கர்ப்பம் திட்டமிடப்படாதது எனவும் மேலும் இத்துடன் எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை முடிவடையும் எனவும் கூறியுள்ளார்.


39 வயதான அலெக்சிஸ் பகுதிநேர உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளராக பணியாற்றிவருகிறார். 39 வயதாகும் இவர் கடந்த 18 ஆண்டுகளில் 8 ஆண்டுகளாக கர்ப்பமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு மீண்டும் ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறி விடுவார்கள் என்ற பதற்றத்துடன் காத்திருந்திருக்கிறார் அலெக்சிஸ் .

ஆனால் மருத்துவர்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பதினோராவது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்று கூறியுள்ளனர் . இதனைக் கேட்ட அலெக்சிஸ் மிகவும் ஆச்சரியம் அடைந்து மகிழ்ச்சிக் உள்ளாகியுள்ளார்.

அலெக்சிஸ் , டேவிட் தம்பதியினருக்கு இதுவரை 2 முதல் 17 வயது வரையிலான குழந்தைகள் உள்ளன இவர்கள் அனைவரும் அழகான குட்டி கேமரூனை சிறப்பாக கவனித்துக் கொள்வதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.

மிகுந்த மகிழ்ச்சியடைந்த அலெக்சிஸ் செய்தியாளர்களிடம், கர்ப்பம் திட்டமிடப்படாதது என்றாலும், தனது குடும்பம் இப்போது முடிந்துவிட்டதாக உணர்கிறேன், மேலும் குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of