குடிபோதையில் தாயை அடித்த தந்தை.. – தடுத்த மகளுக்கு நடந்த கொடூரம்..!

369

உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் நடாலியா.. அன்னா கிறிஸ்டிகா என்று இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.. 16 வயதாகிறது. நடாலியாவுக்கு குடிப்பழக்கம் உள்ளது.. எந்நேரமும் போதையிலேயே இருப்பார்.. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்வார்.. மனைவியை போட்டு தாறுமாறாக அடிப்பார்.

இப்படித்தான் சம்பவத்தன்றும் வீட்டில் தம்பதிக்குள் சண்டை வந்துள்ளது.. போதையில் மனைவியை கண்மூடித்தனமாக நடாலியா அடித்தார்.. ஒருகட்டத்தில் தன் அம்மாவை அடிப்பதை பொறுத்து கொள்ளாத அன்னா ஓடிப்போய் தன் தந்தையை பின்புறமாக சென்று கட்டிப்பிடித்து கொண்டார்.

மகளின் இறுக்கிய பிடியில் இருந்து நடாலியாவால் லேசில் தப்பவே முடியவில்லை.. பிறகு ஒருவழியாக சண்டையைவிட்டு விட்டு வெளியே கிளம்பி சென்றார் நடாலியா… அன்னாவும், தன்னால்தான் அப்பா சண்டை போடாமல் விட்டுவிட்டார் என்று சமாதானம் ஆகிவிட்டார்.

கொஞ்ச நேரத்தில் நடாலியா திரும்பி வந்தார்.. மகள் மட்டும் வீட்டில் இருந்தார்.. திடீரென கதவை சாத்தினார்.. கையில் வைத்திருந்த பெட்ரோலை வீடு முழுக்க ஊற்றிவிட்டு தீயை வைத்துவிட்டார்.. இதை பார்த்து அலறிய அன்னா, கதவை திறந்து தப்பி ஓட முயன்றார்.. ஆனாலும் அவரை கெட்டியாக பிடித்து நிறுத்தி, முகத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார் பெற்ற தந்தை.

முகம் முழுவதும் அன்னாவுக்கு எரிந்து, வெந்து போய் அலறினார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. இப்போது அன்னாவுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. நடாலியா மீது போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of