மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியரை பூட்டிவைத்து உதைத்த பொதுமக்கள்

182

உளுந்தூர்பேட்டையில் அரசு உயர் நிலைப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியா் கிருஷ்ணனை சரமாரியாக பொது மக்கள் தாக்கியுள்ளனர்.

அவர் அப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் வகுப்பறையை பூட்டி ஆசிரியரை கிராம மக்கள் அடித்து உதைத்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த போலீசார் ஆசிரியரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.