நன்றாக செய்துவிட்டீர்கள் மோடி ? – உமர் அப்துல்லா

428
umaraddua11.3.19

நாடாளுமன்ற தேர்தல் காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடி பாகிஸ்தானிடம், பயங்கரவாதிகளிடம், பிரிவினைவாத அமைப்புகளிடம் சரண் அடைந்துவிட்டார். “நன்றாக செய்து விட்டீர்கள் மோடி”. 56 அங்குல மார்பு தோற்றுப்போய் விட்டது” என கூறி உள்ளார்.

மேலும், “காஷ்மீர் தேர்தல் மீது சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், உலக அரங்கில் பிரதமர் மோடி தனது தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்புவார் என நான் ஒருபோதும் கருதவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of