கோபமடைந்த தோனி.. தனது முடிவை மாற்றிக்கொண்ட நடுவர்..

1844

இந்த முறை ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசஸ் ஐதராபாத் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை, 168 ரன்கள் என்ற இலக்கை உருவாக்கியது.

இதையடுத்து, விளையாடிய ஐதரபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இவ்வாறு இருக்க, புதிய பஞ்சாயத்து ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

அதாவது, ஷர்துல் தாகூர் 19-வது ஓவர் வீசியபோது, பந்து வொய்ட் லைனுக்கு மிக அருகில் சென்றது. இதனால், வொய்ட் கொடுப்பதற்கு நடுவர் தனது கைகளை உயர்த்த ஆரம்பித்தார்.

அந்த சமயத்தில், தோனி கோபமாக பார்க்க, உடனே, நடுவர் தனது கைகளை கீழே இறக்கி விடுகிறார். இந்த விவகாரம் பற்றி கிரிக்கெட் ரசிகர்கள் பலர், காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

Advertisement