5 ரன்னுக்கு பதில் 6 ரன்னா..? நடுவர்களின் தவறான தீர்ப்பால் சர்ச்சை..! நொறுங்கிப்போன நியூசிலாந்து..!

1069

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இரண்டு அணிகளும் ஒரே ரண்கள்(241) எடுத்து போட்டியை சமன் செய்தன. இதையடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

இதிலும் போட்டி சமனில் முடிந்ததால், அதிக பவுண்டரிகளை அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் நடுவர்களின் தவறால் நடந்த ஒரு சம்பவம் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அது என்னவென்றால், இறுதிப்போட்டியில் கடைசி ஓவரின் 4-வது பந்து வீசப்பட்ட போது, இங்கிலாந்து வீரரான ஸ்டோக்ஸ் பந்தை அடித்து ஒரு ரன் ஓடுவார். பின் இரண்டாவது ரன் ஓடும் போது, நியூசிலாந்து அணியின் மார்டின் கப்டில் பந்தை தூக்கி எரிவார்.

ஸ்டோக்ஸ் இரண்டாவது ரன்னை ஓடி முடிப்பதற்குள், எரியப்பட்ட பந்தானது பவுண்டரி சென்றுவிடும். இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 6 ரன்கள் கொடுக்கப்பட்டது.

ஆனால் ஐசிசியின் விதிப்படி, ஓவர் த்ரோவ் போகும் போது, இரு பேட்ஸ்மேன்களும் ஓடி முடித்த ரன்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் இது தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நடுவர்களின் இந்த தவறான முடிவை முன்னாள் நடுவரான சைமன் டபளும் உறுதி படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of