சமூக வலைதளத்தை அதிர வைத்து புதிய சாதனை படைத்த பிகில் பட ”உனக்காக” பாடல்

468

விஜய்  – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

கதாநாயகியாக நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இதுவரை படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘உனக்காக’ எனும் ரொமாண்டிக் பாடல் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிட்டு புதிய சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of