மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் – பிரியங்கா காந்தி

99

வடகிழக்கு டெல்லியில், கடந்த மூன்று நாட்களாக நீடித்த வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வருகறிது. இதனால், டெல்லியில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அமைதி பேரணி மேற்கொண்டனர்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தை நோக்கி சென்ற பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால், 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களுடன், சாலையில் அமர்ந்து பிரியங்கா காந்தி தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், டெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

டெல்லி வன்முறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் காரணம் என்றும், இதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of