2க்கு மேல் பிறந்தால் ஓட்டுரிமை கட்: அமைச்சர் சர்ச்சை

279

பீகார் மாநிலம் பெகுசாராய் தொகுதியில் வெற்று பெற்று மத்திய அமைச்சரானவர் ஆச்சார்யா கிரிராஜ் சிங். இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அதேபோன்ற ஒரு டுவிட்டரில் ஒரு டுவீட்டை போட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதில் அவர் இந்தியாவில் 1947 க்கும் 2019 க்கும் இடையில் மக்கள் தொகை வளர்ச்சி 366 சதவீதமாக இருந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் இதே காலத்தில் 113 சதவீதமாகத்தான் இருந்தது. இது மக்கள் தொகை வளர்ச்சியில் வெடிப்பு நிலை.

எனவே, மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த 2 குழந்தைகளுக்கு மேல் பிள்ளைகளை பெற்றால்அந்த தம்பதியரின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும். இதில், சாதி, மதம் இனம் என்ற எந்த பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தால் கட்டுப்படுத்தலாம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து மக்கள் தொகை கட்டுப்படுத்தும் சட்டம் இயற்றவும் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பீகார் மேல்சபை உறுப்பினர் பிரேம் சந்திர மிஸ்ரா கூறுகையில் இந்த மத்திய அமைச்சருக்கு மட்டும் எப்படித்தான் கவர்ச்சிகரமான ஐடியாக்கள் உதிக்கிறதோ?.

நமது அரசியல் சட்டத்தில் இத்தனை குழந்தைகள் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால் அவரால் அதை காட்டமுடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

லோக்சபா தேர்தலின் போதே மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மதரீதியான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of