அதீத செல்பி மோகத்தில் மத்திய அமைச்சர்…, கடுப்பில் பொதுமக்கள்

594

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு பிறகு நாடு முழுவதும் ஒருமித்தக்குறலாக கேட்பது ஒன்று தான். பயங்கரவாதிகளை விட்டுவிட கூடாது, அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்பது தான். இதற்கு உலக நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே பா.ஜனதாவை சேர்ந்த மத்திய அமைச்சர் செய்த காரியம் அனைவரையும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதலில் கேரள மாநிலம் வயநாடை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் வசந்த குமார் விவியும் உயிரிழந்தார்.

அவருடைய பூத உடலுக்கு தேசிய கொடியை போர்த்தப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. அவரின் உடலுக்கு நூற்றுக்கணக்கான பொது மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானமும் சென்று மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த படம் அனைவரையும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, பலர் இது தான் உங்கள் தேசப்பற்றா? என அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of